போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...

http://www.youtube.com/watch?v=-XoKZKobBQQ


விழி நீர் மழையில் நான் நனைந்தேன்,,,,,
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தேன்....
ஆசையில் நான் துடித்தேன் நீ என் மகளாக.....
சத்தியாமாய் உருகியது என் உள்ளம்...
போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...
ஆசையில் தேடி வருவான் உன்போல்
ஒருமகள் வேண்டும் என்று....

"மேகம் திரண்டு கண்டு
மின்னல் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்துகொள்ள வா! வா!"

ஒலியில் செவி தொலைத்தேன்.... இன்பத்தேன்...
முகஒளியில் நான் மொத்தமாய் தொலைந்தேன்...

இம்ம்ம்ம்....
என்று நீ உச்சரிக்கும் போது...
கண்மூடி நான் தொலைந்தேன்....
வடுகபட்டி கவிஞனும்...
தன் வார்த்தைகளின் முழு
வலு அறிந்திருப்பான்..
உன் உச்சரிப்பில் கேட்கும் போது...

வீரமறவன் வேலு பிரபாகரனுக்கு வீரவணக்கம்.....


வீரமறவன் வேலு
பிரபாகரனுக்கு
வீரவணக்கம்.....

எம் தமிழர் வழ்வு காக்க
எடுத்தாய் புதுப்பாதை
எத்துனை துயர் வந்தும்
அசையாத நம்பிக்கையுடன்
அசராது உழைத்தாய் !

இருபது நாடுகள் இணைந்து எதிர்த்த போதும்
இம்மியும் கலங்காது எதிர்த்து நின்றாய்...

பணத்தாலும் பதவியாலும் விலைபோன
பதர்காளால் காட்டிக் கொடுக்கப்பட்டாலும்

இருதி மூச்சு உள்ளவரை போராடினாய்...
வீரமறவனாய் !

வீரத்தமிழனே நீ வாழ்கிறாய் ஒவ்வொரு
உண்மைத் தமிழன் நெஞ்சத்திலும்

முருகனுக்கு அடுத்த தமிழ்ச் சாமி நீயடா!

தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்
சாக வரம்பெற்றவனே !

சத்திரியனுக்கு ஏதடா சாவு!
மரணம் ஒரு மலர் படுக்கை தானே
மாவீரனுக்கு..

இனி பிறக்கும் ஒவ்வொரு
தமிழ் குழந்தையும்

உச்சரிக்கும் உன் பெயர்
தமிழ் இனத்தின்
தலைவன் பிரபாகரன்
ஒருவனே என்று...

வீழ்த்த துடிக்கும் அரசியல் சக்திகள்...


திரு வைகோவை சூழ்ச்சி வலைகளால் வீழ்த்த துடிக்கும் அரசியல் சக்திகள்... விழித்துக்கொண்டால்...  அவர் பிழைத்துக்கொள்வார்...

தமிழகத்தின் தற்போதைய அரசியல் வாதிகளில் சற்று மாறுபட்டவர் (THE ODDMAN OUT) திரு.வைகோ   
கொண்டகொள்கையில் உறுதி, வீரம், 
பொதுவாழ்வில் தூய்மை, 
எதிலும் நேர்மை... உழைப்பு.. 
உழைப்பு... உழைப்பு... 
தெளிந்த கருத்து..என இவ்வளவு தகுதிகள் இருந்தும் 
அரசியலில் ஏன் தனிமைப்படுத்தப் படுகிறார்?  
 
இந்த தகுதிகள் தான் கலைஞர், ஜெயா முதலியோருக்கு
அச்சத்தை கொடுக்கின்றன... 
சிறந்த தகுதிகள் உள்ள இவர் அதிக வெற்றி பெற்றால் 
தங்களின் சுயநல அரசியலுக்கு முடிவு நெருங்கிவிடும்...  
இந்த ஒரு காரணத்தால் தான் ஒவ்வொரு தேர்தலிலும்.... 
ஜே மற்றும் கலைஞரால் அதிக சிரமத்திற்கு ஆட்படுத்த படுகிறார்.... 

அதே நேரத்தில் இதனால் பயனடையும் 
ஒரு லக்கிமேன் ராமதாஸ்.... 
வைக்கோ எந்த பக்கம் போனலும் தன் பேச்சலும்  
உழைப்பாலும்  வலு சேர்க்கும் அணியில் கடைசி நேர
கவிழ்ப்பு வேலைகளின் மூலம் நுழைந்து..  
விவசாயின் உழைப்பை திருடும்.. வியாபாரி போல்.. 
மொத்த லாபத்தை அள்ளிக்கொள்ளும்... தந்திரசாலி... 

முன்பு ஆனவத்தின் உச்சியிலும் அதிகார மமதையிலும் 
ஆடாத ஆட்டம் போட்ட ஜெ.க்கு எதிராக ஊர் ஊராக நடைபயணம் செய்து மக்களின் மனதில் ஒரு எழுச்சியையும் மாற்றத்தை வேண்டிய ஆவலையும் தூண்டி "வைகோ" ஒரு மாபெரும் அரசியல் திருப்புமுனையாக 
இருந்த தருனத்தில் தான்..., 
தமிழக சட்டப்பேரவை தேர்தலை சாமர்தியமாக
கலைஞர் தட்டிப்பறித்தார்... 
மூப்பனார்+ரஜினி ஆதரவு என்ற கடைசி நேர அலையினால்..... 
தேர்தலுக்கு ஒருவார அவகாசத்தில் ஒரு திடீர் மாற்றம்.... 
தான் ஏற்படுத்திய "ஜெ"வை வீழ்த்துங்கள்.... கோசமே 
தனக்கெதிராக திருப்பப்பட்டு தனக்கு வரவேண்டிய 
ஆதரவையும் கலைஞருக்கு போக செய்தது,... 

சதிகார அரசியல் சூழலில் ... 
அவருக்கு கிடைத்த இன்றைய தமிழர் எழுச்சி மிக்க 
காலத்தை அவர் சரியான முறையில் 
பயன்படுத்தாமல் கோட்டைவிட்டார்..... 
எது எப்படி இருப்பினும் கடைசி நேரதிலாவது விழித்துக்கொண்டால்... 
அவர் பிழைத்துக்கொள்வார்...

இன்றைய சூழ்நிலையில் திரு வைகோ.. 
அவர்கள் தனித்து ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கவேண்டும்... 
அது தான் "தமிழர் பாதுகாப்பு கூட்டணி" . நிச்சயம் தமிழர்கள், 
தமிழ் உணவார்களின் ஆதரவுடன் நல்ல வரவேற்பை பெறும்... 
இந்த சந்தர்பத்தை வைகோ இழக்க கூடாது.... 

 தமிழ் வாழ்க! தமிழர் வளம் பெறுக!...

மாற்றம் வேண்டும்...மாற்ற வேண்டும்...மாற வேண்டும்...

மக்கள் எண்ணத்தில் மாற்றம் வேண்டும்
ஆளும் கூட்டணியை மாற்ற வேண்டும்
ஈழத்தமிழர் வாழ்வு மாற வேண்டும் ....

மாற்றம் வேண்டும்....மாற்ற வேண்டும்.....மாற வேண்டும்...

மாநிலத்தை ஆளும் தமிழர் விரோதிகளை மாற்ற வேண்டும்


நம் மக்கள் சிந்திக்க வேண்டும்...
நாளைய பொழுது மாற இன்றே சிந்திபோம்!

கட்டணமில்லா அழைப்பு எண்கள்

பல நேரங்களில் சில குறிப்பிட்ட இடங்களுக்குப் போன் செய்ய வேண்டியிருக்கிறது.
விவரம் தெரிந்து கொள்வதற்காக சில நேரங்களில் அவற்றின் எண்களைத் தேடி படாத பாடுபடுவோம்.ஆனால் அவற்றுக்கு இலவசமாகவே தொடர்பு கொள்ளும்
வகையில் (டோல்ஃபிரீ) கட்டணமில்லா அழைப்பு எண்கள்

* இந்தியன் ஏர் லைன்ஸ் - 1800 180 1407

* ஜெட் ஏர்வேஸ் - 1800 225522

* ஸ்பைஸ் ஜெட் - 1800 180 3333

* ஏர் இந்தியா - 1800 22 7722

* கிங் ஃபிஷ்ஷர் - 1800 180 0101

* கனரா பேங்க் - 1800 44 6000

* சிட்டி பேங்க் - 1800 44 2265

* ஸ்டேட் பேங்க் - 1800 44 1955

* ஐசிஐசிஐ பேங்க் - 1800 333 499

* மாருதி- 1800 111515

* டாடா - 1800 225552

* இந்தியன் ரயில்வே - 131

* இந்தியன் ரயில்வே ரிஸர்வேஷன் - 1345, 1335, 1330.
-------------------------------
இந்திய முழுவதும் S T D CODE அறிந்து கொள்ள :-


http://www.bsnl.co.in/stdsearch.phphttp://www.bsnl.co.in/viewstatecode.php



உலகம் முழுவதும் I S D CODE அறிந்து கொள்ள :-



http://www.bsnl.co.in/isdsearch.phphttp://www.bsnl.co.in/viewisdcode.php?ch=A
-------------------------------

இது எப்படி இருக்கு?

நான் பார்த்த படத்தை
நீ பார்க்க வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
நம் மக்கள் ரசிக்க வேண்டும்...

ஒரு இந்திய தமிழனாக....வேண்டுகிறேன்.

இம்மானுட பிறவியில் மனித நேயமற்றுப் போய் இதயத்தின் திசுக்களெல்லாம் இரும்பாலும் பணத்தினாலும் இருகிப்போனோரே!!!

1. சிறிலங்கா அரச பயங்கரவாத தமிழினப் படுகொலையின் கடந்தவார அழிப்புகள் (எச்சரிக்கை: படங்கள் கோரமான காட்சிகளைக் கொண்டவை) - TamilWin.com

http://www.tamilwin.org/view.php?2a26QVP4b33Z9ECe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0dBZLuQce03g2hF0cc3tj0Cde

2. என் இனம் அழிக்கப்படுகிறது, எப்படி இதை தடுக்க போகிறோம்????

http://www.youtube.com/watch?v=jbY4KxsrOJw

http://www.youtube.com/watch?v=xqcDGchyaH8


இந்த காட்சிகள் மட்டுமல்ல இணையத்தில்
இன்னும் எவ்வளவோ காட்சிகள் இருக்கிறது...
இறந்து கிடக்கும் வீராங்கணையையும்
புணர்வு கொள்ளும் கொடூர மிருகங்களையும் அதன் அரசும்
அதன் இரக்கமற்ற / மனித தன்மை துளியும் அற்ற செயல்களுக்கு
மூளையும் முதுகெழும்பாகவும் உள்ள காங்கிரஸ்
அதற்கு துணைபோகும் அனைத்து துரோக கும்பழுக்கும்....
தமிழகத்தில் முடிவுரை எழுத வேண்டும் என்று உயிர் ஆயுதம் ஏந்தினான்.

முத்துகுமரன்.....

அவனை தொடர்ந்து 13 ஜீவன்கள் தம் உயிரை துச்சமென தூக்கியெரிந்தன...
ஆம் எரிந்தன....தீயில் எரிந்தன... காய்ந்த சறுகுபோல...

நம்மால் அப்படி எல்லாம் போரடடும் திறம் இல்லை..... ஆயினும்
நாம் வழும் சமகாலத்தில் உலகில் நடக்கும் ஒரு கோர நிகழ்வை..
எப்படி கண்டும் கேட்டும் அறிந்தும் ...
சகித்துகொண்டு நம்மால் வாழமுடியும்..
ஒரு சிரு வருத்தம், ஒரு சிரு பரிவு,
ஒரு துளி கருனை கூட இல்லாமல் போய்விட்டதா?
நம் இதயத்தில்...
அப்படி ஏதெனும் இருந்தால்... சொல்லுங்கள் உங்கள் உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு...
அறிந்தவர்களுக்கு, தெறிந்தவர்களுக்கு....

காங்கிரஸ் புறக்கணிக்க படவேண்டும்....

அது வேரோடும்,,, வேறடிமண்ணோடும்
அகற்றபட வேண்டிய விஷசெடி என்று...

அதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் விரோத
ஓட்டு அரசியல் வியாதிகளுக்கும் ஒரு பாடம் சொல்ல வேண்டும்.


ஒரு மனிதனாக...
ஒரு இந்திய தமிழனாக....
வேண்டுகிறேன்.

நான் மறு பதிவிடுகிறேன்.

பதிவு எழுத்து புரியவில்லை அதனால் நகல் எடுத்து யுனிகோடில் வாசித்து விட்டு பதில் கருத்து இடுமுன் ஏனோ? அழித்துவிட்டார் இந்த பதிவர்... என்ன நிர்பந்தமோ.... ஆகவே... நான் மறு பதிவிடுகிறேன்.... துணிவுடன்...
------------------------------------------------------------------------------

1991 ல் ஒரு படம் வந்தது.அந்தப் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் தனது குழுவினரைப் பார்த்து "போங்கடா...போய் இனியாவது புள்ள குட்டிங்கள படிக்க வைங்க" என்று ஒரு வசனம் பேசுவார். 1991 ல் படிக்க வைப்பதற்காக பள்ளிக்கூடம் அனுப்பப் பட்ட அந்த புள்ளகுட்டிகள் 17 வருடம் கழித்து இப்போது சட்டக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறது. என்னதான் எங்களையெல்லாம் படிக்க வச்சாலும்....வேண்டாம் இதற்கு மேல் எழுதினால் எனக்கு வார்த்தைகள் மிகவும் அசிங்கமாக வந்துவிடும் என்ற பயம் வருகின்றது.


டேய்! நாய்ங்களா! எதுடா வீரம்? அப்பாவியா மாட்டுற ஒருத்தனப் புடுச்சு 10 பேரு சேர்ந்து கட்டையால அடிக்கிறீங்களே அதா? அது சுத்த பொட்டத்தனம். தன் நண்பன் ஒருத்தன் உங்ககிட்ட மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சு நீங்க 10,20 பேர் கும்பல் கட்டையோட இருக்கீங்கன்னு தெரிஞ்சும் தனி ஆளா அவன காப்பாத்த வந்து உங்ககிட்ட மாட்டுனான் பாரு ஒருத்தன்...
உங்க கண்ணோட்டத்தின்படியே சொல்றதுன்னா அவன் வீரன். நீங்கெல்லாம் சுத்த பொட்ட பசங்க. அது என்னடா தனி ஆளா உங்களுக்கு ஒருக்காலும் வீரம் வரமாட்டேங்குது. ஒரே ஒரு ஆளா என்னைக்காவது, யாருக்கிட்டயாவது பிரச்சனை பண்ணப் போயிருக்கீங்களாடா நீங்க??? அப்படி ஒரு வரலாறு இதுவரைக்கும் இருக்காடா உங்களுக்கு? பன்னி மாதிரி 10 பேரா நீங்க கூடுனீங்கன்னாதான்டா உங்களுக்கு வீரமே வருது.


அந்த வசனம் பேசிய கமல்ஹாசன் இப்போது உணர்ந்து இருப்பார் "காலம் எவ்வளவுதான் மாறினாலும், கம்ப்யூட்டர் எல்லாம் வந்தாலும் நாங்கள் என்றென்றும் காட்டுமிராண்டியாகவே வாழுவோம் என்று சத்தியம் செய்து கொண்ட கும்பல்" அதுவென்று. நாயை கழுவி கதைதான்.


டிஸ்கி 1: குண்டு வைக்கும் காட்டுமிராண்டிகளுக்கு நடுவில் என்போன்றோர் இருப்பதைப் போல அந்த காட்டுமிராண்டிகள் நடுவிலும் பல நல்லவர்கள் இருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இருப்பினும் ஆத்திரம் அடங்கவில்லை.

டிஸ்கி 2: இதைப் படித்துவிட்டு சில அறிவு கெட்ட ஜென்மங்கள் அனானியாக என்னை திட்ட வரும். சுத்த வீரனாக இருந்தால் உன் GMAIL ACCOUNT டோடு வா. உன் முகத்தோடு வா. கோழை போல் பெயர் இல்லாது வராதே.
Posted by **************** at மதியம் வெள்ளி, நவம்பர் 14, 2008

புத்தமதம் சொல்வது என்ன யுத்தமா?

கிழக்கு வங்கதிற்கு ஒரு நீதி!
தமிழ் ஈழதிற்கு ஒரு நீதியா?
புத்தமதம் சொல்வது என்ன யுத்தமா?
தமிழனைக் கொல்வதுதான்
உங்கள் தர்மமா?
உரிமையை கேட்பவன் தீவிரவாதியா?
சொட்டு நீர் அருந்தாமல்
பண்ணிரன்டு திங்கள் உண்ணா நோன்பிருந்து
அனு அனுவாய் சிதைந்தானே...
தியாகச் செம்மல் திலீபன்
அன்று எங்கே போனது
உங்கள் தேசியம்... காருன்யம்..
பிஞ்சுகளும் தளிர்களும்
பினங்களானதே
தாயும் தமக்கையும்
வன்கொடுமைக்கு ஆளானார்களே
இன்னும் ஆளாகிறார்களே...
இதற்கு என்று தான் முடிவு...

மனிதநேயம் மிக்க மணமக்கள் - வேலூரில் புதுமை திருமணம்

வேலூரில் நடந்த ஒரு திருமணத்தில், திருமணம் முடிந்த பின்னர் மொய் எழுதுவதற்குப் பதில் மணமக்கள் உள்பட திருமண வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் ரத்ததானம் செய்த புதுமை நடந்துள்ளது.

கல்யாணம் என்றால் தாலி கட்டிய அடுத்த நிமிடமே ஆளுக்கு ஒரு பக்கமாக டேபிளைப் போட்டு மஞ்சள் பை, பேனா சகிதம் மணமக்கள் வீட்டால் மொய் எழுத உட்காருவது வழக்கம்.

அதிலும் சில பகுதிகளில் மைக் கட்டி, முத்துக்கருப்பு 300 ரூபாய், முனியாண்டி 500 ரூபாய் என்று அனவுன்ஸ் செய்வதும் வழக்கமாக உள்ளது.

ஆனால் வேலூரில் நடந்த ஒரு திருமணம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு படு வித்தியாசமாக நடந்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. காரணம், இந்தக் கல்யாணத்தின் முடிவில் மொய் எழுதுவதற்குப் பதில் அனைவரும் ரத்ததானம் செய்துததான்.

வேலூரைச் சேர்ந்த டெல்லி பாபு மற்றும் சிவரஞ்சனி ஆகியோரின் திருமணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது. கல்யாண அழைப்பிதழில் கண்டிப்பாக மொய் எழுதக் கூடாது என்று போடுவதற்குப் பதில், கண்டிப்பாக ரத்ததானம் செய்ய வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி நேற்று கல்யாணம் நடந்தேறியது. எந்தவித ஆடம்பர, அமர்க்களங்கள் ஏதுமின்றி பத்தே நிமிடத்தில் கல்யாணத்தை முடித்து விட்டனர். பின்னர் ரத்ததானம் தொடங்கியது. மணமகன் டெல்லி பாபு, மணமகள் சிவரஞ்சனி உள்பட மொத்தம் 35 பேர் ரத்ததானம் செய்தனர்.

மேலும் நேற்று சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால், 35 பெண் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மணமக்கள் சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.

மேலும் மணமகன் டெல்லி பாபு எழுதிய கவிதை நூலும் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்குத் தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டெல்லிபாபுதான் இந்த ரத்ததான யோசனைக்கு மூல காரணம். ஆனால் அவருக்கு உத்வேகமாக இருந்தவர் சந்திரசேகரன். இவர் 1977ம் ஆண்டுகல்யாணம் செய்தபோது இப்படித்தான் ரத்ததானம் செய்தார். அவர்தான் தமிழகத்திலேயே திருமணத்தின்போது மொய்க்குப் பதில் ரத்ததானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கியவர் என்று கூறுகிறார்கள்.

சந்திரசேகரனின் செயலால் மிகவும் கவரப்பட்ட டெல்லி பாபு, தானும் அதுபோலவே செய்ய முடிவு செய்தே நேற்றைய திருமணத்தில் ரத்ததானத்தை நடத்தி அனைவரையும் வியக்க வைத்தார்.

மொய்யை நிராகரித்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பரப்பிய இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்றுதான்.
---- நன்றி தட்ஸ் தமிழ்...

சங்கவை? அங்கவை?சங்கரின் தவறா?

சமீபத்தில் முதல்வன் படம் பார்த்தேன். ஏற்கனவே பல முறை பார்த்து ரசித்திருந்தாலும் இப்போதும் ரசிக்க முடிந்தது. சங்கரின் இயக்கம் என்றாலே அதிக பொருட்செலவும் அதன் பிரமாண்டமும் தான் என்பது சிலரின் கருத்து.

அதையும் தாண்டி

" நீங்க டீவி பார்ப்பதில்லையா?
நான் விவசாயம் பார்க்கிறேன்."

"சாதி இல்லாத சமுதாயம் அமைப்போம் என்கிறீர்கள்?
ஆனால் அந்த சாதிக் கலவரத்தை ஊக்குவிப்பதே நீங்கள் தானே?"

நம்ம ஊருல குடிசைகளே இருக்க கூடாதுனு நினக்கிறேன்.
அதே நினைப்புல தான் நம்ம அரசியல்வாதிகள் தீ வைக்கிறார்கள்"

போன்ற ஊசிவெடி வசனங்கள் ஆழமாக மனதில் தைத்தது.
ஒரு மிகசிறந்த ஒருங்கிணைப்பாளர் சங்கர்,இது அவரது தொடர் வெற்றிகளின் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.
தனது சினிமா தொழிலை சிறப்பாக செய்யும் சங்கர் அங்கங்கே சில சமூக அவலங்களை அன்றாட நிகழ்வுகளையும் பத்திரிக்கை செய்திகளையும், சில விழிப்புணர்வு வசனங்களையும், காட்சி அமைவுகளின் மூலம் உணர செய்திருப்பார்.
இருந்தும் "அங்கவை, சங்கவை" பெயரை பயன்படுத்தியதன் மூலம் ஒரு பெரிய சர்ச்சை. அவன் தமிழனே அல்ல ஆரியன்.அதனால் தான் அங்கவை, சங்கவையை கருப்பாக காட்டினான் என்று வலைதளம் வரை ஒலித்தது, அதற்கு காரணம் என்ன? சங்கர் மட்டும் காரணமா? அப்படி என்றால் அதில் நடித்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா தமிழ் விரோதியா? அல்லது இவர்கள் அவரை விட தமிழையும், தமிழ் இலக்கியதையும் அறிந்தவர்களா?இப்பொது உச்சகுரலில் கூச்சலிடுபவர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு அங்கவை
அல்லது சங்கவை என்று பெயர் வைத்துள்ளனர்.என்னைப் பொருத்தமட்டில் நான் சங்கருக்கு நன்றி சொல்வேன், "அங்கவை, சங்கவை" பட்டிதொட்டியிலுள்ள பாமர தமிழனும் இன்று அறிய முடிந்தமைக்கும்,எதிர்காலத்தில் பலர் இப்பெயர் சூட்டிக்கொள்ளவும் வாய்ப்புகிடைத்தமைக்கு.

"ஈன்ற பொழுதினும் பெறிதுவக்கும்" -கமலஹாசன்

"Kamal, the proud father of Shruthi, kissed her as a token of his blessings and love."

வலைப்பதிவில் "கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்..." படித்தபோது ஏதோ ஒரு அதிர்வு... ஏன் இவருக்கு இப்படி தோன்றியது...இவர்மட்டு மல்ல இன்னும் தினமும் கருத்து கந்தசாமியாக பதிவு போடும் சிலருக்கும் அப்படிதான் தோனுதாம்... இன்னும் ஒருபடி மேலே சிலர் உடைதான் தவறாகத் தோன்றவைக்கிறது.... காரணங்கள் ஆயிரம் சொன்னாலும்.....ஏன் காமம் தவிர்த்த தழுவலை, முத்தத்தை உலகில் இல்லை என்றே சத்தியம் செய்வார்கள் போலும்... தன் பிள்ளை பல குழந்தைகளுக்கு தாயான பின்னும் தாய் தந்தையர் வீட்டிற்கு வரும் போது பேருந்து நிலையத்திற்கே சென்று காத்திருந்து , வந்தவுடன் வாரியணைத்து முத்தமிட்டு என்னடா இப்படி இளைச்சுப் போயிட்ட போன தடவ வந்த போது நல்லாயிருந்தயே... என்று உருகும் பெரியவகர்ளை தமிழகத்தின் அத்தனை ஊர்களிலும் காணலாம்... இக்காட்சியை காணும் பாமரமக்கள் தாமும் இந்த பாசதிற்கு ஏங்குமே அன்றி அவர்களது மணம் வேறுபார்வை கொண்டது இல்லை...

அப்படி இருக்க
மெத்தப் படித்தவர்கள் மேல் நாட்டை அறிந்தவர்களுக்கு.. அது தந்தையும் மகளும் தான் என்றும் உறுதிபட உணர்ந்தவர்களுக்கு... மூளை தவறாக யோசிக்க செய்கிறது என்றால் தவறு எங்கே?

நமக்குள் அல்லது நம் மூளை மடிப்புகளுக்குள் (( நன்றி - சுஜாதாவின் தலமைச்செயலகம்)) புதைந்து கிடக்கும் படிமங்கள் செய்யும் விசமங்கள் அன்றி வேறு எதைச் சொல்வது...












பாருங்கள் இந்த முகத்தில் என்ன தெறிகிறது?





மீண்டும் ஆறுமாத குழந்தையான பெண்ணும்...
"ஈன்ற பொழுதினும் பெறிதுவக்கும்" தாயுள்ளம் கொண்ட தந்தையும்...
அவரது ஈரம் கசிந்த விழிகளும்...

பெற்ற பிள்ளைக்கு எத்தனை முத்தம் கொடுத்தோம் என்று எண்ணிக்கை பார்க்க முடியுமா?அல்லது யார் முன்னிலையில் கொடுப்பது கூடாது என்று யோசித்து அல்லது திட்டமிட்டு கொடுக்க முடியுமா?...
இதுவே அவரது பெண்ணாய் இல்லாமல் மகனாய் இருந்தல் அப்போதும் நீங்கள் குறை சொல்வீர்களா?

பாலின வேறுபாடு பாசத்திற்கு இல்லை என்பது என் கருத்து. மற்றும் கமல் என்றும் மற்றவர்களின் மதிபிடலுக்காகவோ.. மற்றவரின் முன் ஒரு மாயையை உருவாக்கவோ என்றும் முயன்றதில்லை. தன் வாழ்க்கையை வாழத்தெறிந்த பகுத்தறிவு உடைய மனிதன்.

பாரதி சத்திய ராஜா

C¯USÚº £õµvµõáõ ÷£a_: B¢vµºPЮ, PßÚhºPЮ, ÷PµÍºPЮ JßøÓ ¦›¢x öPõÒÍ ÷Ásk®... AÁºPÒ ÷£_® ö©õÈPÒ GÀ»õ® uªÈÀ C¸¢x ¤›¢x ö\ßÓøÁ. AÁºPÒ ÁõÌ¢x öPõsi¸US® £s£õk, C[Q¸¢x ÷Áº ÂmhøÁuõß. |õ[PÒ Aø©v PõUQ÷Óõ÷© uµ, ÷PõøÇPÒ AÀ». "Pº|õhP® öPõshõß' GßÖ ö£¯º GkUP AvPU Põ»UöPk ÷uøÁ¨£hõx.

|iPº \z¯µõä ÷£mi: ¯õµõP C¸¢uõ¾® £v»i öPõkUP ÷Ásk®. CÀø»ö¯ßÓõÀ, E»Q¼¸US® ö©õzu ©UPÒ öuõøP°À 10 ÷Põi uªÇß ©mk® ö£õUøP Áõ¯õPÄ®, S¸hÚõPÄ® BQÂkÁõß.

தமிழன் சத்யராஜ்

கடந்த 40 வருடங்களாக மராட்டியத்திலும், மலேசியாவிலும், ஈழத்திலும், இப்போது கர்நாடகத்திலும் தமிழனின் கண்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை இனியும் தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் தலைமுடி மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள். எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

சூப்பர் காமெடியன் வாட்டாள்:

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள். நமக்கு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

பொய்யிலே வாழும் இலங்கை அரசு




பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் இலங்கை இனவெறிக் கூட்டத்திற்க்கும் அதன் ஜால்ரா கும்பலுக்கும்...பதிலுறுத்தும் செய்தியாக .... தமிழ் நெட்.காம் -ல் மறைந்த திரு.சிவநேசன் M.P. அவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் அஞ்சலி செலுத்திய படங்கள் .


மேலும் விவரங்களுக்கு
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24901

கொசுவுக்கு கோவில்--இன்றைய செய்தி

öPõ_ÄUS ÷PõÂÀ Gʨ¤¯ Av\¯ hõUhº:

öPõ_UPÍõÀ HØ£k® wø©PÒ SÔzx Qµõ© ©UPÎh® ö\´x Á¢u ¤µ\õµ®, PsPõm], P¸zuµ[S GxÄ÷© øPöPõkUPÂÀø». C¨£i¨£mh öPõ_ÄUS ÷PõÂÀ uõß Pmh ÷Ásk®
GßÖ J¸ hõUhº •iÄ ö\´uõº. öPõ_ÄUS AÁº Pmi¯ ÷PõÂÀ, C¨ ÷£õx |À» £»ß u¸QÓx. B¢vµ ©õ{»zvÀ EÒÍ ö©õUåõS¢u® GßÓ Qµõ©zvÀ hõUhµõP £o¯õØÖQÓõº \wè S©õº. Qµõ©zvÀ ÷u[Q {ØS® uspº, S¨ø£PÍõÀ öPõ_ AvPÍÂÀ EØ£zv¯õQ,
öPõ_UPi¯õÀ £À ÷ÁÖ ÷|õ´PÐhß ]Qaø\US Á¢uÁºPÎh®, öPõ_UPÍõÀ HØ£k® wø©PÒ SÔzx ÂÍUQ¨ £õºzuõº. PsPõm] |hzv, öPõ_UPøÍ G¨£i uºUP»õ® Gߣx SÔzx ÂÍUQÚõº. P¸zuµ[S |hzvÚõº; P»¢x öPõÒÍzuõß BÎÀø».öÁÖzx¨ ÷£õÚ hõUhº \wè, BߪP ÁȰÀ ©UPøÍ v¸zu •iÄ ö\´uõº. J¸ ÷Á¨£©µzxUS R÷Ç,
vsøn²hß Ti¯ Cµshøµ Ai E¯µ, "÷PõÂÀ' PmiÚõº.

"÷Põ¼À' ö£›¯ÍÂÀ' öPõ_Âß £hzøu Áøµ¢x øÁzuõº. C¢u "÷PõÂÀ' |À» £»øÚ öPõkzux. "C¢u ÷PõÂÀ ÁÈ£õk |hzxÁuØS AÀ»; öPõ_ÁõÀ HØ£k® wø©PÒ SÔzx AÔ¢x öPõÒÁuØSz uõß' GßÖ Qµõ© ©UPÎh® ÂÍUQÚõº.öPõ_Âß £hzxUS R÷Ç, "öPõ_÷Á CßÖ ÷Áshõ®, |õø Í Áõ' GßÖ Áõ\P® GÊv øÁzxÒÍõº. £UPÁõmiÀ J¸ ö£›¯ £»øP°À, öPõ_øÁ JÈUP GßÚ ö\´¯ ÷Ásk®; ö\´¯UThõx Gߣøu ö£›¯ GÊzxUPÎÀ GÊv øÁzxÒÍõº.

©¸zxÁ©øÚ°À C¸¢x Ãk v¸®¦ÁuØS •ß, C¢u "÷Põ¾US' ö\À»
hõUhº \wè S©õº uÁÖÁvÀø». A[SÒÍ vsøn°À \ØÖ ÷|µ® A©º¢v¸¨£õº. A¨÷£õx A[S Á¸® ©UPÎh®,öPõ_UPÎß wø© SÔzx®,AÁØøÓ G¨£
i J鬣x
Gߣx SÔzx® ÂÍUSÁõº.¤ßÚº Ãk v¸®¦Áõº.Cx AßÓõh ÁÇUP©õQÂmhx.©UPÎh•® ÂȨ¦nºÄ HØ£mkÒ Íx.ö£Ø÷Óõ¸US, ÷|]¨£ÁºPÐUS,Áͺ¨¦ ¤µõoPÐUS, Hß,|iøPUSU Th ÷PõÂÀ Pmi¯
Pøuø¯ ÷PÒ¨£mk C¸UP»õ®.öPõ_ÄUS ÷PõÂÀ Pmh¨£mk
C¸¨£øu CuØS •ß ÷PÒ¨£mi¸UP÷Á •i¯õx. öPõ_ÄUS Gʨ£¨
£mh J÷µ ÷PõÂÀ,CxÁõPzuõß C¸US®.

"கொசாவொ" சுதந்திரம் பெற்றது...



"கொசாவொ" என்கிற ஒரு குட்டி நாடு சுதந்திரம் பெற்றது...அதன் மக்கள் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர்.செய்தி பார்க்கும் போதே என் கனவு தொடங்கியது.....
ஈழத்தில் சுதந்திரம்..
ஐ நா அங்கீகரித்தது...
உலகத்தமிழர் எல்லாம்...
உற்சாகத்தில் மிதந்தனர்...
தமிழகத்தில் விழா...
விழா என்றால் சாதாரணமல்ல...
"யவன ராணி"யில் சான்டில்யன் வர்ணிப்பாரே!
அப்படிப்பட்ட ஒரு இந்திர விழா...
இதன் எதிரொலிப்பு சூரியன் விழிக்கும்
அவுஸ்த்திரேலியாவில் தொடங்கி
மலேஷியா, சிங்கப்பூர்,பர்மா,மொரிஷியஸ், நைஜீரியா,தென் ஆப்ரிக்கா,ஜெர்மன்,அமெரிக்கா,கனடா என்று உலகமே...
ஒன்றுகூடி கொண்டாடியது...
ஈழத்தில் மக்கள் எல்லாம்...
ஒருவருக்கொருவர் இனிப்பை பறிமாறிக்கொண்டனர்...
தமிழனுக்கு என்று ஒரு நாடு தரனியில் உருவானது...
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ....
பேச்சிலும் சுத்த தமிழ்.. அவர் விடும் மூச்சிலும் தமிழ்..
வீதிகள் எங்கும்.. தமிழும் அதன் கலைகளும்...
ஒவ்வொரு நாட்டிலும் இருந்து கப்பல்களிலும் விமானத்திலும்..
ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்புகிறார்கள்...
இணையம், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்
என எங்கு நோக்கினும்... தமிழர் விழா செய்தி!!!

யாழ் பல்கலைக்கழகம் மீண்டும் தன் பொழிவைப் பெற்றது...
அன்பும் அமைதியும் தவழும் பண்புகள் நிறைந்த நாடாக....
தமிழர் புகழை தரனியில் பறை சாற்றும் ஒரு நாடாக...
சாதியற்ற ஒரு சமுதாயமாக...
சுற்றுலாவின் சுவர்க்கமாக..
இதோ விடிந்தது... ஈழம் எனும் ஒரு தேசம்...
மகிழ்ச்சியில் கண்களில் நீர்த்திவழைகள்...
திவழைகள் மறைத்ததால்...
காட்சிகள் மறைய...
சுய உணர்வு பெற்றேன்,..
இது நாடக்குமா....
அமைதியாய் விடியுமா நாளைய பொழுது ???....
1927-லேயெ சுதந்திர இந்தியாவை கனவு கண்டான் பாரதி ....
அதுபோல் நானும் காண்கிறேன் இன்றே...
விடியாத பொழுதென்று எதுவுமில்லையே...
முடியாத துயர் என்று எதுவுமில்லையே...
எல்லாத் துயரும் ஒரு நாள் முடிந்துதானே ஆகவேண்டும்...
விழிகளில் கனவுகளோடும்....
விடியலில் நம்பிக்கையோடும்...
உலகத் தமிழர்களில் ஒருவன்...

ஔவை மொழி

ஔவை மொழி

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

ஒன்றுமில்லை 2008ன் முதல் பதிவு....ஆகவே ஒளவை மொழி... தமிழ் எப்பொதும் இனிமையும் இளமையும் நிறைந்தது..

"மனித வணக்கம்" சொன்ன நம்ம கமலை பாராட்டணும்...


"மனித வணக்கம்"
*******************************
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்


கவிஞர் புவியரசுக்கு நடந்த பாராட்டு விழாவில்,கமல் மேடையில் வாசித்த அவருடைய கவிதை தான் இது....

இதை வாசிக்கும் போது ஏதோ ஒரு ஆழுணர்வு என் மனதில் ஆழுமை கொண்டது...
வாழ்க்கை ஏன் எதற்கு என்பது எப்படி என்பதை ஒருபுறம் தள்ளிவிட்டு....

எங்கே எப்படி தொடங்கி ....
எத்துனை உறவுகளில் உறைந்து...
உலன்று...
சுழன்று...
சூழ்கொண்டு,,,
சுடர்விட்டு...
பூத்து...
காய்த்து..
கணிந்து...
வெடித்து.....
வளர்ந்து....
மீண்டும் ஒரு சுழலர்ச்சிக்கு வித்திடுகிறது....

அதற்குள்...
நமை வாழ்வித்த...
வாழ்வை தந்த...
நம் வாழ்வாய் மாறிப்போன..
உறவுகள்...
தகப்பன் தாயில் தொடங்கி தீயிலோ... மண்ணிலோ....
தேகம் சேர்ந்து ஐக்கியம் ஆகும்வரை...

ஒலி ஒளி அசைவுடன் உடன்வரும் ஒவ்வொரு உறவுகளையும் ஓசையின்றி யோசித்து பார்க்க நேசித்து போற்ற நெஞ்சம் விளைகிறது...

ஆகவே ஆதி லெமூரிய கண்டத்தில் வாழ்ந்த என் முதல் ஔவையின் மூலம் சொந்தம் ஆன என் இரத்த சொந்தங்களே... பூமிப்பந்தின் எம்மூலையில் வாழ்ந்தாழும்... இதோ என்மூளையில் இப்போது....

மௌனமாகிறேன்....
உங்களை என் மனதில் கான...