போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...

http://www.youtube.com/watch?v=-XoKZKobBQQ


விழி நீர் மழையில் நான் நனைந்தேன்,,,,,
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தேன்....
ஆசையில் நான் துடித்தேன் நீ என் மகளாக.....
சத்தியாமாய் உருகியது என் உள்ளம்...
போதி மரத்து புத்தனும் ஒடி வருவான்...
ஆசையில் தேடி வருவான் உன்போல்
ஒருமகள் வேண்டும் என்று....

"மேகம் திரண்டு கண்டு
மின்னல் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்துகொள்ள வா! வா!"

ஒலியில் செவி தொலைத்தேன்.... இன்பத்தேன்...
முகஒளியில் நான் மொத்தமாய் தொலைந்தேன்...

இம்ம்ம்ம்....
என்று நீ உச்சரிக்கும் போது...
கண்மூடி நான் தொலைந்தேன்....
வடுகபட்டி கவிஞனும்...
தன் வார்த்தைகளின் முழு
வலு அறிந்திருப்பான்..
உன் உச்சரிப்பில் கேட்கும் போது...

வீரமறவன் வேலு பிரபாகரனுக்கு வீரவணக்கம்.....


வீரமறவன் வேலு
பிரபாகரனுக்கு
வீரவணக்கம்.....

எம் தமிழர் வழ்வு காக்க
எடுத்தாய் புதுப்பாதை
எத்துனை துயர் வந்தும்
அசையாத நம்பிக்கையுடன்
அசராது உழைத்தாய் !

இருபது நாடுகள் இணைந்து எதிர்த்த போதும்
இம்மியும் கலங்காது எதிர்த்து நின்றாய்...

பணத்தாலும் பதவியாலும் விலைபோன
பதர்காளால் காட்டிக் கொடுக்கப்பட்டாலும்

இருதி மூச்சு உள்ளவரை போராடினாய்...
வீரமறவனாய் !

வீரத்தமிழனே நீ வாழ்கிறாய் ஒவ்வொரு
உண்மைத் தமிழன் நெஞ்சத்திலும்

முருகனுக்கு அடுத்த தமிழ்ச் சாமி நீயடா!

தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்
சாக வரம்பெற்றவனே !

சத்திரியனுக்கு ஏதடா சாவு!
மரணம் ஒரு மலர் படுக்கை தானே
மாவீரனுக்கு..

இனி பிறக்கும் ஒவ்வொரு
தமிழ் குழந்தையும்

உச்சரிக்கும் உன் பெயர்
தமிழ் இனத்தின்
தலைவன் பிரபாகரன்
ஒருவனே என்று...

வீழ்த்த துடிக்கும் அரசியல் சக்திகள்...


திரு வைகோவை சூழ்ச்சி வலைகளால் வீழ்த்த துடிக்கும் அரசியல் சக்திகள்... விழித்துக்கொண்டால்...  அவர் பிழைத்துக்கொள்வார்...

தமிழகத்தின் தற்போதைய அரசியல் வாதிகளில் சற்று மாறுபட்டவர் (THE ODDMAN OUT) திரு.வைகோ   
கொண்டகொள்கையில் உறுதி, வீரம், 
பொதுவாழ்வில் தூய்மை, 
எதிலும் நேர்மை... உழைப்பு.. 
உழைப்பு... உழைப்பு... 
தெளிந்த கருத்து..என இவ்வளவு தகுதிகள் இருந்தும் 
அரசியலில் ஏன் தனிமைப்படுத்தப் படுகிறார்?  
 
இந்த தகுதிகள் தான் கலைஞர், ஜெயா முதலியோருக்கு
அச்சத்தை கொடுக்கின்றன... 
சிறந்த தகுதிகள் உள்ள இவர் அதிக வெற்றி பெற்றால் 
தங்களின் சுயநல அரசியலுக்கு முடிவு நெருங்கிவிடும்...  
இந்த ஒரு காரணத்தால் தான் ஒவ்வொரு தேர்தலிலும்.... 
ஜே மற்றும் கலைஞரால் அதிக சிரமத்திற்கு ஆட்படுத்த படுகிறார்.... 

அதே நேரத்தில் இதனால் பயனடையும் 
ஒரு லக்கிமேன் ராமதாஸ்.... 
வைக்கோ எந்த பக்கம் போனலும் தன் பேச்சலும்  
உழைப்பாலும்  வலு சேர்க்கும் அணியில் கடைசி நேர
கவிழ்ப்பு வேலைகளின் மூலம் நுழைந்து..  
விவசாயின் உழைப்பை திருடும்.. வியாபாரி போல்.. 
மொத்த லாபத்தை அள்ளிக்கொள்ளும்... தந்திரசாலி... 

முன்பு ஆனவத்தின் உச்சியிலும் அதிகார மமதையிலும் 
ஆடாத ஆட்டம் போட்ட ஜெ.க்கு எதிராக ஊர் ஊராக நடைபயணம் செய்து மக்களின் மனதில் ஒரு எழுச்சியையும் மாற்றத்தை வேண்டிய ஆவலையும் தூண்டி "வைகோ" ஒரு மாபெரும் அரசியல் திருப்புமுனையாக 
இருந்த தருனத்தில் தான்..., 
தமிழக சட்டப்பேரவை தேர்தலை சாமர்தியமாக
கலைஞர் தட்டிப்பறித்தார்... 
மூப்பனார்+ரஜினி ஆதரவு என்ற கடைசி நேர அலையினால்..... 
தேர்தலுக்கு ஒருவார அவகாசத்தில் ஒரு திடீர் மாற்றம்.... 
தான் ஏற்படுத்திய "ஜெ"வை வீழ்த்துங்கள்.... கோசமே 
தனக்கெதிராக திருப்பப்பட்டு தனக்கு வரவேண்டிய 
ஆதரவையும் கலைஞருக்கு போக செய்தது,... 

சதிகார அரசியல் சூழலில் ... 
அவருக்கு கிடைத்த இன்றைய தமிழர் எழுச்சி மிக்க 
காலத்தை அவர் சரியான முறையில் 
பயன்படுத்தாமல் கோட்டைவிட்டார்..... 
எது எப்படி இருப்பினும் கடைசி நேரதிலாவது விழித்துக்கொண்டால்... 
அவர் பிழைத்துக்கொள்வார்...

இன்றைய சூழ்நிலையில் திரு வைகோ.. 
அவர்கள் தனித்து ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கவேண்டும்... 
அது தான் "தமிழர் பாதுகாப்பு கூட்டணி" . நிச்சயம் தமிழர்கள், 
தமிழ் உணவார்களின் ஆதரவுடன் நல்ல வரவேற்பை பெறும்... 
இந்த சந்தர்பத்தை வைகோ இழக்க கூடாது.... 

 தமிழ் வாழ்க! தமிழர் வளம் பெறுக!...