"கொசாவொ" சுதந்திரம் பெற்றது...



"கொசாவொ" என்கிற ஒரு குட்டி நாடு சுதந்திரம் பெற்றது...அதன் மக்கள் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர்.செய்தி பார்க்கும் போதே என் கனவு தொடங்கியது.....
ஈழத்தில் சுதந்திரம்..
ஐ நா அங்கீகரித்தது...
உலகத்தமிழர் எல்லாம்...
உற்சாகத்தில் மிதந்தனர்...
தமிழகத்தில் விழா...
விழா என்றால் சாதாரணமல்ல...
"யவன ராணி"யில் சான்டில்யன் வர்ணிப்பாரே!
அப்படிப்பட்ட ஒரு இந்திர விழா...
இதன் எதிரொலிப்பு சூரியன் விழிக்கும்
அவுஸ்த்திரேலியாவில் தொடங்கி
மலேஷியா, சிங்கப்பூர்,பர்மா,மொரிஷியஸ், நைஜீரியா,தென் ஆப்ரிக்கா,ஜெர்மன்,அமெரிக்கா,கனடா என்று உலகமே...
ஒன்றுகூடி கொண்டாடியது...
ஈழத்தில் மக்கள் எல்லாம்...
ஒருவருக்கொருவர் இனிப்பை பறிமாறிக்கொண்டனர்...
தமிழனுக்கு என்று ஒரு நாடு தரனியில் உருவானது...
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ....
பேச்சிலும் சுத்த தமிழ்.. அவர் விடும் மூச்சிலும் தமிழ்..
வீதிகள் எங்கும்.. தமிழும் அதன் கலைகளும்...
ஒவ்வொரு நாட்டிலும் இருந்து கப்பல்களிலும் விமானத்திலும்..
ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்புகிறார்கள்...
இணையம், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்
என எங்கு நோக்கினும்... தமிழர் விழா செய்தி!!!

யாழ் பல்கலைக்கழகம் மீண்டும் தன் பொழிவைப் பெற்றது...
அன்பும் அமைதியும் தவழும் பண்புகள் நிறைந்த நாடாக....
தமிழர் புகழை தரனியில் பறை சாற்றும் ஒரு நாடாக...
சாதியற்ற ஒரு சமுதாயமாக...
சுற்றுலாவின் சுவர்க்கமாக..
இதோ விடிந்தது... ஈழம் எனும் ஒரு தேசம்...
மகிழ்ச்சியில் கண்களில் நீர்த்திவழைகள்...
திவழைகள் மறைத்ததால்...
காட்சிகள் மறைய...
சுய உணர்வு பெற்றேன்,..
இது நாடக்குமா....
அமைதியாய் விடியுமா நாளைய பொழுது ???....
1927-லேயெ சுதந்திர இந்தியாவை கனவு கண்டான் பாரதி ....
அதுபோல் நானும் காண்கிறேன் இன்றே...
விடியாத பொழுதென்று எதுவுமில்லையே...
முடியாத துயர் என்று எதுவுமில்லையே...
எல்லாத் துயரும் ஒரு நாள் முடிந்துதானே ஆகவேண்டும்...
விழிகளில் கனவுகளோடும்....
விடியலில் நம்பிக்கையோடும்...
உலகத் தமிழர்களில் ஒருவன்...