"மனித வணக்கம்" சொன்ன நம்ம கமலை பாராட்டணும்...


"மனித வணக்கம்"
*******************************
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்


கவிஞர் புவியரசுக்கு நடந்த பாராட்டு விழாவில்,கமல் மேடையில் வாசித்த அவருடைய கவிதை தான் இது....

இதை வாசிக்கும் போது ஏதோ ஒரு ஆழுணர்வு என் மனதில் ஆழுமை கொண்டது...
வாழ்க்கை ஏன் எதற்கு என்பது எப்படி என்பதை ஒருபுறம் தள்ளிவிட்டு....

எங்கே எப்படி தொடங்கி ....
எத்துனை உறவுகளில் உறைந்து...
உலன்று...
சுழன்று...
சூழ்கொண்டு,,,
சுடர்விட்டு...
பூத்து...
காய்த்து..
கணிந்து...
வெடித்து.....
வளர்ந்து....
மீண்டும் ஒரு சுழலர்ச்சிக்கு வித்திடுகிறது....

அதற்குள்...
நமை வாழ்வித்த...
வாழ்வை தந்த...
நம் வாழ்வாய் மாறிப்போன..
உறவுகள்...
தகப்பன் தாயில் தொடங்கி தீயிலோ... மண்ணிலோ....
தேகம் சேர்ந்து ஐக்கியம் ஆகும்வரை...

ஒலி ஒளி அசைவுடன் உடன்வரும் ஒவ்வொரு உறவுகளையும் ஓசையின்றி யோசித்து பார்க்க நேசித்து போற்ற நெஞ்சம் விளைகிறது...

ஆகவே ஆதி லெமூரிய கண்டத்தில் வாழ்ந்த என் முதல் ஔவையின் மூலம் சொந்தம் ஆன என் இரத்த சொந்தங்களே... பூமிப்பந்தின் எம்மூலையில் வாழ்ந்தாழும்... இதோ என்மூளையில் இப்போது....

மௌனமாகிறேன்....
உங்களை என் மனதில் கான...

தேவதை கவிதைகள்

இனியவனே!!
என்னை தூண்ட உன் ஒரு விரல் தீண்டல் போதுமடா!
ஆனால் நீ உன் எச்சில் முத்தங்களால் என்னை
கொழுந்து விட்டு எரிய செய்துவிட்டாயடா!
என்னை உன்னுடன் விரைவில் இனைத்துக்கொள்!
உன் சுவாசத்தால் வாழும்
உன்னவள்...


என் முதல் தேடல்...

என் முதல் தேடல்...
முதல் முத்தம்
மூச்சின் முதல் ஓட்டம்
கண்களின் முதல் காட்சி
நான் நேசித்த பால்ய சிநேகிதி
பதின்ம வயதின் கனவுகள்
எதுவும் என் நினைவில் இல்லை
இப்போது...
உன் நினைவு மட்டும்...

ஒரு முத்தம்….

உன் ஒரு முத்தம் போதுமடா எனக்கு

நீ வரும் வரை!

நிறைய ஆசைகள் நெஞ்சுக்குள்ளே!!!

நீ நினைக்கலாம்

சராசரி பெண் தானே என்று...

ஆனாலும் சொல்கிறேன் கேள்

உனக்கு பொறுமை இருந்தால்!

ஒரு முழம் பூ நீ சூட்டுவது...

ஒரு கவளம் உணவு நீ ஊட்டுவது...

என் தலை கோதும் உன் விரல்...

உன் கேளி...

உன் புன்னகை...

உன் மடியில் அழுவது...

உன்னை கட்டிக்கொண்டு தூங்குவது...

உன் அணைப்பு...

உன்னுடன் வண்டியில் பயணம்...

உன் தீண்டல்... உன் முத்தம்...

இன்னும் உண்டு....

நான் இழந்து கொண்டிருப்பது...

இருப்பினும்

உன் ஒரு முத்தம் போதுமடா எனக்கு

நீ வரும் வரை!

பிரிவு.....

பிரிவு என்னை பார்த்து சிரித்தது

உன்னவனிடம் இருந்து உன்னை

பிரித்து விட்டேன் என்று...

பாவம் அதற்கு தெரியாது

இந்தப் பிரிவு...

நம் காதலை...

பாசத்தை...

நேசத்தை...

இன்னும் அழப்படுத்துகிறது என்று...

இப்போது நான் சிரிக்கிறேன்

பிரிவைப் பார்த்து....

அவசரம்...

இன்னுமொரு முத்தம்

அழுத்தமா...

சத்தமா...

ஆழமா...

சூடா...

கொடுத்திருக்கலாம்!

என்ன அவசரமோ உனக்கு

தொலைபேசியை துண்டித்துவிட்டாய்...

வாரத்தில் ஒரு நாள் தான் பேசுகிறோம்

என் நிலை பற்றி கொஞ்சூண்டு

யோசிக்கலாமே செல்லம்!

அம்மு நான் காத்திருக்கிறேன்...

உனக்காக....

வன்முறைகளை நிறுத்த வேண்டும்


இன்றைய செய்தியில் முக்கிய செய்தியாக இடம் பிடித்துள்ள சன் டீவியின் புதிய நேரடி ஒளிபரப்பு உத்தியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேபில் ஆபரேட்டர் சங்கமும்.
இது தொடகத்தில் கேபில் ஆபரேட்டர்களின் தொழிழை பாதிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும் அதனால் புதிய தொழில் நுட்பங்களை தடுக்க முடியுமா? யுகம் யுகமாய் மாறிவரும் சமுதாயம் அதன் தேவைகளையும் மாற்றி வந்துள்ளது.ஆகவே மாற்றம் என்பது ஒன்று தான் மாறாதது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்।தேவையற்ற போரட்டங்களையும் அரசியல் வன்முறைகளையும் நிறுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். ஒவ்வொரு வன்முறைப் போரட்டங்களின் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள் தான் என்பதையும் நினைவுபடுதுகிறேன். மதுரையில் மூன்று இளம் உயிர்கள், ஓசூரில் இரு அப்பவிகள்,தர்மபுரியில் மூன்று கல்லூரி மாணவிகள் என்று சொல்லிக்கொண்டே.......போகலாம். ஆகவே வன்முரையை அனைவரும் கைவிடவேண்டும் ॥ வாழ்க ஜன நாயகம்॥ அமைதியும் அன்பும் கொண்டு அற்புதமாக வாழ அனைரும் முன்வரவேண்டும்.