நான் மறு பதிவிடுகிறேன்.

பதிவு எழுத்து புரியவில்லை அதனால் நகல் எடுத்து யுனிகோடில் வாசித்து விட்டு பதில் கருத்து இடுமுன் ஏனோ? அழித்துவிட்டார் இந்த பதிவர்... என்ன நிர்பந்தமோ.... ஆகவே... நான் மறு பதிவிடுகிறேன்.... துணிவுடன்...
------------------------------------------------------------------------------

1991 ல் ஒரு படம் வந்தது.அந்தப் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் தனது குழுவினரைப் பார்த்து "போங்கடா...போய் இனியாவது புள்ள குட்டிங்கள படிக்க வைங்க" என்று ஒரு வசனம் பேசுவார். 1991 ல் படிக்க வைப்பதற்காக பள்ளிக்கூடம் அனுப்பப் பட்ட அந்த புள்ளகுட்டிகள் 17 வருடம் கழித்து இப்போது சட்டக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறது. என்னதான் எங்களையெல்லாம் படிக்க வச்சாலும்....வேண்டாம் இதற்கு மேல் எழுதினால் எனக்கு வார்த்தைகள் மிகவும் அசிங்கமாக வந்துவிடும் என்ற பயம் வருகின்றது.


டேய்! நாய்ங்களா! எதுடா வீரம்? அப்பாவியா மாட்டுற ஒருத்தனப் புடுச்சு 10 பேரு சேர்ந்து கட்டையால அடிக்கிறீங்களே அதா? அது சுத்த பொட்டத்தனம். தன் நண்பன் ஒருத்தன் உங்ககிட்ட மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சு நீங்க 10,20 பேர் கும்பல் கட்டையோட இருக்கீங்கன்னு தெரிஞ்சும் தனி ஆளா அவன காப்பாத்த வந்து உங்ககிட்ட மாட்டுனான் பாரு ஒருத்தன்...
உங்க கண்ணோட்டத்தின்படியே சொல்றதுன்னா அவன் வீரன். நீங்கெல்லாம் சுத்த பொட்ட பசங்க. அது என்னடா தனி ஆளா உங்களுக்கு ஒருக்காலும் வீரம் வரமாட்டேங்குது. ஒரே ஒரு ஆளா என்னைக்காவது, யாருக்கிட்டயாவது பிரச்சனை பண்ணப் போயிருக்கீங்களாடா நீங்க??? அப்படி ஒரு வரலாறு இதுவரைக்கும் இருக்காடா உங்களுக்கு? பன்னி மாதிரி 10 பேரா நீங்க கூடுனீங்கன்னாதான்டா உங்களுக்கு வீரமே வருது.


அந்த வசனம் பேசிய கமல்ஹாசன் இப்போது உணர்ந்து இருப்பார் "காலம் எவ்வளவுதான் மாறினாலும், கம்ப்யூட்டர் எல்லாம் வந்தாலும் நாங்கள் என்றென்றும் காட்டுமிராண்டியாகவே வாழுவோம் என்று சத்தியம் செய்து கொண்ட கும்பல்" அதுவென்று. நாயை கழுவி கதைதான்.


டிஸ்கி 1: குண்டு வைக்கும் காட்டுமிராண்டிகளுக்கு நடுவில் என்போன்றோர் இருப்பதைப் போல அந்த காட்டுமிராண்டிகள் நடுவிலும் பல நல்லவர்கள் இருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இருப்பினும் ஆத்திரம் அடங்கவில்லை.

டிஸ்கி 2: இதைப் படித்துவிட்டு சில அறிவு கெட்ட ஜென்மங்கள் அனானியாக என்னை திட்ட வரும். சுத்த வீரனாக இருந்தால் உன் GMAIL ACCOUNT டோடு வா. உன் முகத்தோடு வா. கோழை போல் பெயர் இல்லாது வராதே.
Posted by **************** at மதியம் வெள்ளி, நவம்பர் 14, 2008

புத்தமதம் சொல்வது என்ன யுத்தமா?

கிழக்கு வங்கதிற்கு ஒரு நீதி!
தமிழ் ஈழதிற்கு ஒரு நீதியா?
புத்தமதம் சொல்வது என்ன யுத்தமா?
தமிழனைக் கொல்வதுதான்
உங்கள் தர்மமா?
உரிமையை கேட்பவன் தீவிரவாதியா?
சொட்டு நீர் அருந்தாமல்
பண்ணிரன்டு திங்கள் உண்ணா நோன்பிருந்து
அனு அனுவாய் சிதைந்தானே...
தியாகச் செம்மல் திலீபன்
அன்று எங்கே போனது
உங்கள் தேசியம்... காருன்யம்..
பிஞ்சுகளும் தளிர்களும்
பினங்களானதே
தாயும் தமக்கையும்
வன்கொடுமைக்கு ஆளானார்களே
இன்னும் ஆளாகிறார்களே...
இதற்கு என்று தான் முடிவு...