"ஈன்ற பொழுதினும் பெறிதுவக்கும்" -கமலஹாசன்

"Kamal, the proud father of Shruthi, kissed her as a token of his blessings and love."

வலைப்பதிவில் "கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்..." படித்தபோது ஏதோ ஒரு அதிர்வு... ஏன் இவருக்கு இப்படி தோன்றியது...இவர்மட்டு மல்ல இன்னும் தினமும் கருத்து கந்தசாமியாக பதிவு போடும் சிலருக்கும் அப்படிதான் தோனுதாம்... இன்னும் ஒருபடி மேலே சிலர் உடைதான் தவறாகத் தோன்றவைக்கிறது.... காரணங்கள் ஆயிரம் சொன்னாலும்.....ஏன் காமம் தவிர்த்த தழுவலை, முத்தத்தை உலகில் இல்லை என்றே சத்தியம் செய்வார்கள் போலும்... தன் பிள்ளை பல குழந்தைகளுக்கு தாயான பின்னும் தாய் தந்தையர் வீட்டிற்கு வரும் போது பேருந்து நிலையத்திற்கே சென்று காத்திருந்து , வந்தவுடன் வாரியணைத்து முத்தமிட்டு என்னடா இப்படி இளைச்சுப் போயிட்ட போன தடவ வந்த போது நல்லாயிருந்தயே... என்று உருகும் பெரியவகர்ளை தமிழகத்தின் அத்தனை ஊர்களிலும் காணலாம்... இக்காட்சியை காணும் பாமரமக்கள் தாமும் இந்த பாசதிற்கு ஏங்குமே அன்றி அவர்களது மணம் வேறுபார்வை கொண்டது இல்லை...

அப்படி இருக்க
மெத்தப் படித்தவர்கள் மேல் நாட்டை அறிந்தவர்களுக்கு.. அது தந்தையும் மகளும் தான் என்றும் உறுதிபட உணர்ந்தவர்களுக்கு... மூளை தவறாக யோசிக்க செய்கிறது என்றால் தவறு எங்கே?

நமக்குள் அல்லது நம் மூளை மடிப்புகளுக்குள் (( நன்றி - சுஜாதாவின் தலமைச்செயலகம்)) புதைந்து கிடக்கும் படிமங்கள் செய்யும் விசமங்கள் அன்றி வேறு எதைச் சொல்வது...












பாருங்கள் இந்த முகத்தில் என்ன தெறிகிறது?





மீண்டும் ஆறுமாத குழந்தையான பெண்ணும்...
"ஈன்ற பொழுதினும் பெறிதுவக்கும்" தாயுள்ளம் கொண்ட தந்தையும்...
அவரது ஈரம் கசிந்த விழிகளும்...

பெற்ற பிள்ளைக்கு எத்தனை முத்தம் கொடுத்தோம் என்று எண்ணிக்கை பார்க்க முடியுமா?அல்லது யார் முன்னிலையில் கொடுப்பது கூடாது என்று யோசித்து அல்லது திட்டமிட்டு கொடுக்க முடியுமா?...
இதுவே அவரது பெண்ணாய் இல்லாமல் மகனாய் இருந்தல் அப்போதும் நீங்கள் குறை சொல்வீர்களா?

பாலின வேறுபாடு பாசத்திற்கு இல்லை என்பது என் கருத்து. மற்றும் கமல் என்றும் மற்றவர்களின் மதிபிடலுக்காகவோ.. மற்றவரின் முன் ஒரு மாயையை உருவாக்கவோ என்றும் முயன்றதில்லை. தன் வாழ்க்கையை வாழத்தெறிந்த பகுத்தறிவு உடைய மனிதன்.

2 comments:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Flores Online, I hope you enjoy. The address is http://flores-on-line.blogspot.com. A hug.

உதயதேவன் said...

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.