சங்கவை? அங்கவை?சங்கரின் தவறா?

சமீபத்தில் முதல்வன் படம் பார்த்தேன். ஏற்கனவே பல முறை பார்த்து ரசித்திருந்தாலும் இப்போதும் ரசிக்க முடிந்தது. சங்கரின் இயக்கம் என்றாலே அதிக பொருட்செலவும் அதன் பிரமாண்டமும் தான் என்பது சிலரின் கருத்து.

அதையும் தாண்டி

" நீங்க டீவி பார்ப்பதில்லையா?
நான் விவசாயம் பார்க்கிறேன்."

"சாதி இல்லாத சமுதாயம் அமைப்போம் என்கிறீர்கள்?
ஆனால் அந்த சாதிக் கலவரத்தை ஊக்குவிப்பதே நீங்கள் தானே?"

நம்ம ஊருல குடிசைகளே இருக்க கூடாதுனு நினக்கிறேன்.
அதே நினைப்புல தான் நம்ம அரசியல்வாதிகள் தீ வைக்கிறார்கள்"

போன்ற ஊசிவெடி வசனங்கள் ஆழமாக மனதில் தைத்தது.
ஒரு மிகசிறந்த ஒருங்கிணைப்பாளர் சங்கர்,இது அவரது தொடர் வெற்றிகளின் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.
தனது சினிமா தொழிலை சிறப்பாக செய்யும் சங்கர் அங்கங்கே சில சமூக அவலங்களை அன்றாட நிகழ்வுகளையும் பத்திரிக்கை செய்திகளையும், சில விழிப்புணர்வு வசனங்களையும், காட்சி அமைவுகளின் மூலம் உணர செய்திருப்பார்.
இருந்தும் "அங்கவை, சங்கவை" பெயரை பயன்படுத்தியதன் மூலம் ஒரு பெரிய சர்ச்சை. அவன் தமிழனே அல்ல ஆரியன்.அதனால் தான் அங்கவை, சங்கவையை கருப்பாக காட்டினான் என்று வலைதளம் வரை ஒலித்தது, அதற்கு காரணம் என்ன? சங்கர் மட்டும் காரணமா? அப்படி என்றால் அதில் நடித்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா தமிழ் விரோதியா? அல்லது இவர்கள் அவரை விட தமிழையும், தமிழ் இலக்கியதையும் அறிந்தவர்களா?இப்பொது உச்சகுரலில் கூச்சலிடுபவர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு அங்கவை
அல்லது சங்கவை என்று பெயர் வைத்துள்ளனர்.என்னைப் பொருத்தமட்டில் நான் சங்கருக்கு நன்றி சொல்வேன், "அங்கவை, சங்கவை" பட்டிதொட்டியிலுள்ள பாமர தமிழனும் இன்று அறிய முடிந்தமைக்கும்,எதிர்காலத்தில் பலர் இப்பெயர் சூட்டிக்கொள்ளவும் வாய்ப்புகிடைத்தமைக்கு.

No comments: